தமிழ்நாடு

tamil nadu

ரூ.46 கோடி கரோனா நிதி வழங்கிய பிளிப்கார்ட் நிறுவனம்

By

Published : Apr 18, 2020, 5:06 PM IST

இந்தியாவில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு நிவாரண நிதியாக ரூ.46 கோடித் தொகையை வால்மார்ட் பிளிப்கார்ட் நிறுவனம் வழங்கியுள்ளது.

Walmart
Walmart

இந்தியாவில் கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ள நிலையில், அரசுடன் சேர்ந்து பல்வேறு நிறுவனங்கள் தங்களின் பங்களிப்பை மேற்கொண்டுவருகின்றன.

இந்தச் சூழலில் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான வால்மார்ட் பிளிப்கார்ட் நிறுவனம் நோய்த் தடுப்பு நடவடிக்கையாக இந்திய அரசுக்கு 46 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதில் 38.3 கோடி ரூபாய் இந்திய மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பு உபகரணங்களான முகக்கவசம், பாதுகாப்பு உடைகள் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 7.7 கோடி ரூபாய் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளோரின் நலனுக்காக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகள், கிராமப்புற மக்கள், சிறு, குறு தொழிலாளர்களைப் பாதிக்காத வண்ணம் இந்தத் தொகை செலவிடப்படும் எனத் தெரிவித்துள்ளது.

மேற்கண்ட அறிவிப்பை பிளிப்கார்ட் நிறுவன தலைமை செயல் அலுவலர் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க:நிதி சிக்கல் குறித்து வங்கிகள் கூட்டமைப்பு ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details