மும்பை:யெஸ் வங்கியில் பலகோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்பரேஷன் நிறுவனத்தின் விளம்பரதாரர்கள் கபில் வாதவாண் மற்றும் தீரஜ் வாதவாண் ஆகியோருக்கு மும்பை உயர் நீதிமன்றம் இன்று பிணை (ஜாமின்) வழங்கியது.
இந்த வழக்கில் 60 நாள்களுக்குள் அமலாக்கத்துறை இயக்குநரகம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய தவறியதால் நீதிபதி பாரதி டாங்க்ரே இவர்களுக்கு பிணை வழங்கியுள்ளார்.
முன்னதாக, இருவரும் தலா ரூ.1 லட்சம் வைப்பு செலுத்துமாறும், அவர்களின் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.