தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

சமூக விலகலைக் கடைப்பிடிக்க புதிய ரீசார்ஜ் வசதியை ஏற்படுத்திய வோடஃபோன் - ஐடியா

கரோனா வைரஸ் காரணமாக தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் - ஐடியா, வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்வதற்காக புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

vodafone-idea-launches-voice-based-contactless-recharge-initiative-at-retail-outlets
vodafone-idea-launches-voice-based-contactless-recharge-initiative-at-retail-outlets

By

Published : May 15, 2020, 4:50 PM IST

ஊரடங்கு காலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் வோடஃபோன் - ஐடியா நிறுவனம் சார்பாக வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்வதற்கு புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதில் வாடிக்கையாளர்கள், தொலைத்தொடர்பு நிறுவனத்தின் செயலியிலிருந்து 10 இலக்க எண் மூலம் அழைத்து 10 அடி தூரத்தில் விலகி நின்று ரீசார்ஜ் செய்ய வேண்டும் எனப் பேசினாலே நிர்வாகிகளால் அவர்களின் கோரிக்கையைக் கேட்க முடியும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வோடஃபோன் - ஐடியா நிர்வாகிகள் பேசுகையில், ''வோடஃபோன் - ஐடியா ஸ்மார்ட் கனெக்ட் வாடிக்கையாளர் செயலி மூலம் வாடிக்கையாளர்கள் சில்லறை விற்பனையாளரிடம் தங்களது அலைபேசியை ஒப்படைக்காமலேயே ரீசார்ஜ் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளரின் 10 இலக்க அலைபேசி எண்ணிலிருந்து விற்பனையாளருடன் பேசுவதை கூகுள் வாய்ஸ் (Google Voice) மூலம் பதிவு செய்து 10 அடி தூரத்திலிருந்தே ரீசார்ஜ் செய்ய உதவும். இதனால் மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்க முடியும். விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோருக்கு இடையே உள்ள தொடர்பைக் குறைக்கும் பொருட்டு குரல் அடிப்படையிலான ரீசார்ஜ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

இதையும் படிங்க:பாப்-அப் செல்பியுடன் அறிமுகமான ஹவாய் Y9s ஸ்மார்ட்போன்!

ABOUT THE AUTHOR

...view details