டெல்லி: விஸ்தாரா தனது புதிய வழித்தடத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அரபு நாடான கத்தாருக்கு டெல்லியிலிருந்து வாரத்தில் இரண்டு நாள்கள், இந்த விமான சேவையை விஸ்தாரா நிறுவனம் வழங்கவுள்ளது.
டெல்லி: விஸ்தாரா தனது புதிய வழித்தடத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அரபு நாடான கத்தாருக்கு டெல்லியிலிருந்து வாரத்தில் இரண்டு நாள்கள், இந்த விமான சேவையை விஸ்தாரா நிறுவனம் வழங்கவுள்ளது.
டெல்லியிலிருந்து தோகாவிற்கும், தோகாவிலிருந்து டெல்லிக்குமான விமான சேவையை, வியாழன், ஞாயிறு ஆகிய இரு தினங்கள் பயணிகள் அனுபவிக்கலாம்.
டாட்டா சியா ஏர்லைன்ஸ் லிமிடெட், விஸ்டாரா என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இது டாடா சன்ஸ் லிமிடெட், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லிமிடெட் (எஸ்ஐஏ) ஆகியவற்றுக்கு இடையேயான 51:49 பங்குகளைக் கொண்ட கூட்டு நிறுவனமாகும்.
புதிய வழித்தட சேவையின் அட்டவணை விவரங்கள்
வழித்தடம் | விமான எண் | சேவை நாள்கள் | புறப்படும் நேரம் | சேரும் நேரம் |
டெல்லி (DEL) – தோகா (DOH) | UK 283 | வியாழன், ஞாயிறு | 20:00 மணி | 21:45 மணி |
தோகா (DOH) – டெல்லி (DEL) | UK 284 | வியாழன், ஞாயிறு | 22:45 மணி | 05:10 மணி |
*அட்டவணையின் காலம் நவம்பர் 19, 2020 முதல் டிசம்பர் 31, 2020 வரை! |