தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் வானகரம் மலர் சந்தை செயல்படும்! - vanagaram flower market to resume from august 17

புதிய இடத்தில் மலர் சந்தையை அமைக்க வேண்டும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலர்களுக்கு மலர் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் வானகரத்தில் புதிதாக மலர் சந்தை செயல்படவுள்ளது.

வானகரம் மலர் சந்தை
வானகரம் மலர் சந்தை

By

Published : Aug 15, 2020, 6:25 PM IST

சென்னை: மலர் சந்தை வரும் திங்கட்கிழமை முதல் வானகரம் பகுதியில் செயல்படும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரோனா தொற்று காரணமாக சென்னை கேயம்பேட்டில் இருந்த காய்கறி, பழம், மலர் ஆகிய சந்தைகள் மூடப்பட்டன. காய்கறிச் சந்தை திருமழிசைக்கு மாற்றப்பட்டது. மலர் சந்தையை மாதவரம், சாத்தான்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மாற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாற்று இடங்கள் வெகு தூரத்தில் இருப்பதால் தங்களது வியாபாரம் கடுமையாக பாதிக்கும் என அவர்கள் கூறிவந்தனர்.

'திருமண அழைப்பிதழ் இருக்கோ இல்லையோ கரோனா பரிசோதனை சான்றிதழ் இருக்கணும்'

தொடர்ந்து மலர் சந்தை மூடப்பட்டிருந்த நிலையில், வியாபாரிகள் நகரின் பல்வேறு பகுதிகளில் தனித்தனியே சாலை ஓரங்களில் கடைகளை அமைத்து வியாபாரத்தை நடத்தி வருகின்றனர். ஒரே இடத்தில் விற்பனை செய்தால் வியாபாரம் அதிகரிக்கும் என்பதால், மீண்டும் புதிய இடத்தில் மலர் சந்தையை அமைக்க வேண்டும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலர்களுக்கு பூ வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.

இவ்வேளையில் வானகரம் கயிலாச நாதர் கோயில் அருகே மலர் சந்தை அமைக்க அலுவலர்களும் வியாபாரிகளும் இடையில் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டது. அங்குள்ள நான்கு ஏக்கர் நிலத்தை பயன்படுத்த அறநிலையத்துறை ஒப்புதல் வழங்கிய நிலையில், ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் தற்காலிக கூடாரங்கள் அமைத்து 150 முதல் 200 கடைகளுடன் மலர் சந்தை செயல்படவுள்ளது.

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

நான்கு வழிச்சாலை அருகே அமைந்திருப்பதால் வியாபாரம் அதிகளவில் நடைபெறும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர். எனினும் இங்கு மொத்த வியாபாரிகள் மட்டும் பூ வாங்கிச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தகுந்த இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வியாபாரம் நடத்தப்படும் என வியாபாரிகள் உறுதியளித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details