தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்துப்பேச அமெரிக்கப் பிரதிநிதிகள் வருகை!

இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்துப்பேச அடுத்த வாரம் அமெரிக்கப் பிரதிநிதிகள் இந்தியா வருகிறார்கள்.

US-India trade talks

By

Published : Nov 15, 2019, 2:00 PM IST

இந்தியா உடனான வர்த்தக நட்புறவை மேம்படுத்தவும், வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்துப் பேசவும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் அமெரிக்கப் பிரதிநிதிகள் அடுத்த வாரம் இந்தியா வரஉள்ளனர்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், அக்டோபர் மாதம் வர்த்தக நடவடிக்கைகள் குறித்து ஆராய அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது இருநாடுகளுக்கிடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பேச்சுவார்த்தை சுமுக நிலையை எட்டியுள்ளதாகவும், விரைவில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் நிதியமைச்சர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

பிஎஸ்என்எல்லின் அசரடிக்கும் ஓய்வூதியத் திட்டம்!

இதனையடுத்து வர்த்தக மற்றும் கைத்தொழில் மந்திரி பியூஷ் கோயல் நவம்பர் 12ஆம் தேதி மூன்று நாள் அரசுமுறை பயணமாக வாஷிங்டனுக்கு சென்றார். பின்னர், நேற்றுமுன்தினம் அமெரிக்கப் பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசருடன் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக சவால்கள் குறித்தும், வாய்ப்புகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சூழலில் அமெரிக்கப் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வருகை தருவது பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைக் ஏற்படுத்தியுள்ளது.

நாட்டை விட்டு வெளியேறுகிறதா வோடபோன்? பெரும் நஷ்டத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

ABOUT THE AUTHOR

...view details