நாட்டின் சமையல் எண்ணெய் இறக்குமதியை குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க தேசிய அளவிலான புதிய திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இதை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
NMEO-OP என்ற திட்டத்தில் முதற்கட்டமாக சுமார் ரூ.11,000 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது எனவும் இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது எனவும் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு
இந்தத் திட்டம் தொடர்பாக மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசுகையில், "விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்கி அவர்கள் உற்பத்தியை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது சமையல் எண்ணெய் உற்பத்தியானது 3.5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நடைபெறும் நிலையில், அதை 28 லட்சம் டன் ஹெக்டேராக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளில், நாட்டின் பருப்பு உற்பத்தி 50 விழுக்காடு உயர்வைக் கண்டுள்ளது. இந்த முன்னேற்றத்தை நமது விவசாயிகளால் சமையல் எண்ணெய் உற்பத்தியிலும் மேற்கொள்ள முடியும்" என்றார்.
ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்று பிஎம் கிசான் சம்மான் நிதித் திட்ட விழாவில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, சமையல் எண்ணெய் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற வேண்டும் என விவசாயிகளிடம் கூறினார். இந்தப் பின்னணியில், இந்தப் புதியத் திட்டம் தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க:Ola electric scooters - ஸ்டைல், லுக், டெக்னாலஜி, வசதி என அசத்தும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்