தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பிக்கி அமைப்பின் தலைவராக உதய் சங்கர் பொறுப்பேற்பு - இந்தியன் மெட்டல் லிமிட்டெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுப்ராகந்த்

ஸ்டார், டிஸ்னி இந்தியா நிறுவனத்தின் தலைவரான விஜய் சங்கர் தற்போது பிக்கி அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

Uday Shankar
Uday Shankar

By

Published : Dec 14, 2020, 6:59 PM IST

பிக்கி(Federation of Indian Chambers of Commerce & Industry) கூட்டமைப்பின் புதிய தலைவராக உதய் சங்கர் செயல்படுவார் என அந்த அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, வால்ட் டிஸ்னி APAC நிறுவனத்தின் தலைவராகவும், ஸ்டார் மற்றும் டிஸ்னி இந்தியாவின் தலைவராகவும் உள்ள உதய் சங்கர், 2020-21 காலகட்டத்தில் பிக்கி அமைப்பின் தலைவராக செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, டிஸ்னி நிறுவனத்தில் தற்போது உள்ள பொறுப்பிலிருந்து வரும் 31ஆம் தேதி (டிசம்பர் 31) பதவி விலகுகிறார். அப்பல்லோ குழுமத்தின் இணை இயக்குநரான சங்கீத ரெட்டியின் பதவிக்காலம் நிறைவு பெறுவதையடுத்து புதிய தலைவராக உதய் செயல்படவுள்ளார்.

அத்துடன் இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் மேத்தா, இந்தியன் மெட்டல் லிமிட்டெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுப்ராகந்த் பான்டா இருவரும் பிக்கியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:2020இல் வெளிவந்த வீட்டை ஸ்மார்ட்டாக்கும் அட்டகாசமான கருவிகள்

ABOUT THE AUTHOR

...view details