ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் முக்கிய நபர்களை அங்கீகரிக்கும் விதமாக அந்நிறுவனம் நீல நிற பேட்ஜ் (blue varified badge) வழங்கி வந்தது. இதன் மூலம் பல்வேறு துறைகளில் உள்ள குறிப்பிடத்தக்க நபர்களை ட்விட்டர்வாசிகளால் எளிதில் அடையாளம் காண முடிந்தது.
ஆனால் இந்த நீல நிற பேட்ஜ் முறை பெரிய அளவு குழப்பத்தை ஏற்படுத்துவதாக பலரும் புகாரளித்தைத் தொடர்ந்து பேட்ஜ் வழங்கும் திட்டத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தற்காலிமாக நிறுத்தியது.
இந்நிலையில், நீல நிற பேட்ஜை வழங்கும் திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளதாக அந்நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிபர் தேர்தல் போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது முறையான மற்றும் பாதுகாப்பான உரையாடல்களை கட்டமைக்க இந்த பேட்ஜ் எவ்வளவு உதவியது என்பதைப் புரிந்துகொண்டோம். எனவே மீண்டும் இந்த பேட்ஜை வழங்கும் முறையை அறமுகப்படுத்தவுள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.