தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஊழியர்களுக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் அளித்த ட்விட்டர் நிறுவனம் - ஊழியர்களுக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம்

கலிபோர்னியா: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் நிறுவன ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே வேலை (ஒர்க் ஃப்ரம் ஹோம்) பார்த்தால் போதுமானது என ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

Twitter staff told to work from home
Twitter staff told to work from home

By

Published : Mar 4, 2020, 10:03 AM IST

சீனா வுகான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, தென் கொரியா உள்பட பல்வேறு நாடுகளில் வேகமாக பரவிவருகிறது.

இதுவரை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 3,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 90,000க்கும் மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

வேகமாக பரவிவரும் இந்த தொற்றுநோயை சரிசெய்ய சீன அரசு கடுமையாக போராடி வருகிறது. இந்நிலையில், ஊழியர்களை பாதுகாக்கும் நோக்கில், ட்விட்டர் நிறுவனம் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை பார்த்தால் போதுமானது என அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை ட்விட்டர் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை ஊழியரான ஜெனிபர் கிறிஸ்டி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜப்பான், சவுத் கொரியா, ஹாங் காங் நாடுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த ஒர்க் ஃப்ரம் ஹோம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: போப் ஆண்டவருக்கு கொரோனா இல்லை

ABOUT THE AUTHOR

...view details