தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ரூ.1,000 கோடி முதலீடு: திட்ட அறிவிப்பை வெளியிட்ட டி.வி.எஸ். நிறுவனம்

தனது டயர் தயாரிப்பு அளவை உயர்த்தும் விதமாக ரூ.1,000 கோடி முதலீடு செய்ய டி.வி.எஸ். நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

TVS Srichakra
TVS Srichakra

By

Published : Dec 8, 2020, 8:07 PM IST

நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான டி.வி.எஸ். நிறுவனத்தின் கிளை நிறுவனமான டி.வி.எஸ். ஸ்ரீ சக்ரா நிறுவனம் தனது முதலீடு தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அடுத்த மூன்று ஆண்டுகளில் தனது டயர் தயாரிப்பு அளவை 25-30 விழுக்காடு உயர்த்த சுமார் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. குறிப்பாக, மதுரை, பாட்னா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி விரிவாக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முதலீடு தொடர்பாக பேசிய டி.வி.எஸ். ஸ்ரீசக்ரா நிறுவன இயக்குநர் ரவிச்சந்திரன், நாடு முழுவதும் டி.வி.எஸ். நிறுவனம் கொண்டுள்ள கிளைகளைக் கொண்டு உற்பத்தி திறனை வெகுவாக உயர்த்தவுள்ளோம். தற்சார்பு இந்தியா திட்டம் மூலம் முதலீடுகளை ஈர்க்கவும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தவும் நம்பிக்கையுடன் பயணிக்க டி.வி.எஸ். நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்றார்.

இதையும் படிங்க:ரிலையன்ஸ் நிறுவனங்களை ஏலம் கேட்க காலக்கெடு நீட்டிப்பு

ABOUT THE AUTHOR

...view details