அமெரிக்க அதிபராக பதவியேற்றபின் முதன்முறையாக டொனல்ட் ட்ரம்ப் இந்தியா வந்துள்ளார். ட்ரம்பின் வருகை இந்திய தொழில்துறையினரின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மும்பையில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற முகேஷ் அம்பானி ட்ரம்பின் இந்திய வருகை குறிப்பிட்டு பேசினார். மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சத்திய நாதெல்லாவுடன் உரையாடிய முகேஷ் அம்பானி, 'தொழில்நுட்ப புரட்சி இந்தியாவை பெரிதும் புரட்டிப் போட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்குப்பின் 38 கோடி பேர் டிஜிட்டல் தளத்திற்கு மாறியுள்ளனர். இந்தியா உலகின் மூன்று பெரும் பொருளாதார சக்திகளாக உருவெடுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.