தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

'பெட்ரோல், டீசல் விலையை இப்பவாவது குறைங்க' - போக்குவரத்து சங்கம் கோரிக்கை

டெல்லி: சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சியைக் கண்டுள்ள நிலையில் அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என போக்குவரத்து சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Transporters
Transporters

By

Published : Apr 21, 2020, 9:00 PM IST

கரோனா பாதிப்பின் எதிரொலியாக உலகளவில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால், கச்சா எண்ணெய் தேவை வெகுவாகச் சரிந்துள்ளது.

தேவை குறைவின் காரணமாக கச்ச எண்ணெய் உற்பத்தி செய்யும் ரஷ்யா, சவூதி அரேபியா உள்ளிட்ட எண்ணெய் உற்பத்தி நாடுகள், குறைந்த விலையில் எண்ணெய் ஏற்றுமதி செய்து வருகின்றன.

இதையடுத்த சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய்யின் விலை வரலாறு காணாத வீழ்ச்சியைக் கண்டுள்ளது. நேற்று அமெரிக்க சந்தைகளில் கச்சா எண்ணெய்யின் விலை பூஜ்ஜியத்துக்கும் கீழ் குறைந்து விற்பனையானது.

இந்தச் சூழலைப் பயன்படுத்தி, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என அகில இந்திய மோட்டார் வாகனப் போக்குவரத்து சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் சுமார் 95 லட்சம் லாரி ஓட்டுநர்களை உறுப்பினராகக் கொண்டுள்ள இந்தச் சங்கம் தனது அறிக்கையில், 'கச்சா எண்ணெய் கொள் முதலை அரசு தற்போது மிகக் குறைந்த விலையான 20 டாலருக்கு மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசு தற்போதைய நிலையில் பெட்ரோலுக்கு ரூ.22.98, டீசலுக்கு ரூ.18.83 வரிகள் வசூலித்து வருகின்றன. சர்வதேச சூழலைப் பயன்படுத்தி வியாபாரிகள் போக்குவரத்து தொழிலில் ஈடுபடுவோர் பயன்படும் வகையில் விலைக்குறைப்பு நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சேரிகள் உருவாவதற்கு வெட்கப்பட வேண்டும் - ரத்தன் டாடா வேதனை

ABOUT THE AUTHOR

...view details