தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

நடப்பாண்டில் மொத்த வரி வருவாய் 22.5% சரிவு - நாட்டின் வரிவருவாய் 22.5% சரிவு

கடந்தாண்டை ஒப்பிடும்போது மத்திய அரசின் வரி வருவாய் 22.5 விழுக்காடு சரிவைச் சந்தித்துள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மொத்த வரி வருவாய்
மொத்த வரி வருவாய்

By

Published : Sep 16, 2020, 3:33 PM IST

நாட்டின் வரி வருவாய் குறித்த விவரங்களை வருமான வரித் துறை தற்போது தெரிவித்துள்ளது. அதன்படி, நடப்பு நிதியாண்டிற்கான மத்திய வரி வருவாய் செப்டம்பர் 15ஆம் தேதிவரை இரண்டு லட்சத்து 53 ஆயிரத்து 532.3 கோடி ரூபாயாக உள்ளது.

கடந்தாண்டு இதே காலகட்டத்தில் வரி வருவாய் மூன்று லட்சத்து 27 ஆயிரத்து 320.2 கோடி ரூபாயாக இருந்தது. இந்தப் புள்ளி விவரங்களை ஒப்பிடுகையில் மத்திய அரசின் வரி வருவாய் 22.5 விழுக்காடு சரிவைச் சந்தித்துள்ளது தெரியவந்துள்ளது. கரோனா லாக்டவுனால் ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கமே இதற்கு முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அடுத்த சில மாதங்களில் இந்த நிலை மேம்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு ஒரே காலாண்டில் இவ்வளவு கோடி இழப்பு!

ABOUT THE AUTHOR

...view details