பிரபல வழக்கறிஞர் நானி பல்கிவாலாவின் பிறந்தநாளான நேற்று அவரை நினைவுகூரும் வகையில் சிறப்பு நிகழ்வு மும்பையில் நடைபெற்றது. அதில் டாடா குழும நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "நாட்டின் வர்த்தகம், பொருளாதார சூழலில் மாற்றம் கொண்டுவர வேண்டியது காலத்தின் தேவை. நாட்டின் வளர்ச்சியை நோக்கி மக்களை வலுக்கட்டாயமாகத் தள்ளுவதைவிட, அவர்களின் தடைகளைக் களைவதன் மூலம் வளர்ச்சி இயல்பாகக் கிட்டிவிடும்" என்று யோசனை தெரிவித்தார்.
பொருளாதாரம் குறித்த பார்வையானது மாற்றம்பெற வேண்டும் எனச் சொன்ன அவர், தேவையில்லாமல் அனைத்தையும் சந்தேகப் பார்வையுடன் பார்ப்பது தவறு என்றார்.
ரிசர்வ் வங்கி குழுவின் உறுப்பினரான சந்திரசேகரன் வங்கித் துறை நிர்வாகத்தில் அரசின் தலையீடு குறைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பொது விநியோகம், வாராக்கடன் விவகாரம், ஊழலற்ற நிர்வாகம் ஆகியவற்றில் அரசு சிறப்பாகச் செயல்படுவதாக மத்திய அரசை சந்திரசேகரன் வெகுவாகப் பாராட்டினார்.
இதையும் படிங்க: ரஷ்யாவின் புதிய பிரதமர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு