கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாளுக்கு நாள் இந்தியப் பங்குச்சந்தை சரிவை சந்தித்தது மட்டும் அல்லாமல் தங்கம் விலையும் கடும் உயர்வை சந்தித்துவந்தது. இந்நிலையில் நீண்ட நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 33 ஆயிரத்து 472 ரூபாய் என விற்பனை ஆகிவருகிறது. மேலும் கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்து 4184 ரூபாய்க்கு விற்பனையாகிறது.