ஹைதராபாத்:விண்வெளித் துறையில் இந்தியாவின் திறனைத் அதிகரித்தல்’ குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) ஏற்பாடு செய்திருந்த காணொலி வாயிலான கருத்தரங்கத்தில் மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “புராணங்களில் விஷ்ணுவின் நான்காவது அவதாரமாக நரசிம்மன் அவதாரம் வருகிறது. இதில் விஷ்ணு பாதி மனிதனாகவும், பாதி சிங்கமாகவும் தோன்றினார்.
இரணியன் மனிதனாலும், மற்ற உயிரினங்களினாலும், பகலிலும், இரவிலும் கொல்ல முடியாதபடி வரத்தை பெற்றிருந்தார். அவரை எந்த ஆயுதத்தாலும், உயிரினத்தாலும் அழிக்க முடியாது.