டெல்லி: தொலை தொடர்பு நிறுவனங்களின் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நாடே முடங்கிய நிலையில் தொலைதொடர்பு நிறுவனங்களின் லாபம் 5 சதவீதம் உயர்வு கண்டுள்ளது தெரியவந்துள்ளது.
முன்னதாக, ஜூன் வரையிலான காலாண்டில் லாபம் ஒரு விழுக்காடு ஆக காணப்பட்டது. இந்தச் சந்தையில் பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்டவை ஆதிக்கம் செலுத்துகின்றன.
கரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது காலாண்டில் பார்தி ஏர்டெல்லின் லாபம் 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள ஜியோவின் வருமானம் 6 சதவீதம் வரை உயர்வை கண்டுள்ளது.