தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

Q2 காலாண்டு முடிவு வெளியீடு: உயர்வை சந்தித்த டாடா ஸ்டீல் நிறுவனம்! - tata steel news updates

டெல்லி: Q2 காலாண்டு முடிவில் ஆறு விழுக்காடு உயர்ந்து 3ஆயிரத்து 302.31 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக டாடா ஸ்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது.

tata steel profit

By

Published : Nov 7, 2019, 9:00 PM IST

தற்போது Q2 காலாண்டு முடிவுகளை பல நிறுவனங்கள் வெளியிட்டு வரும் நிலையில், டாடா ஸ்டீல் நிறுவனம் மூன்று மாதத்திற்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 3ஆயிரத்து 302.31 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல்அலுவலர் டீ.வி நரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கடந்தாண்டு 41ஆயிரத்து 257.66 கோடி ரூபாயாக இருந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் இந்தாண்டு 34ஆயிரத்து 762.73 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இந்தியாவின் வர்த்தக சூழல் சவாலாக உள்ளது.

மேலும் இதனை தொடர்ந்து உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த உள்ளோம் என்றும், இந்தாண்டு இறுதிக்குள் விற்பனையை அதிகரிக்க அனைத்து முயற்சிகளும் எடுத்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 12,000 புள்ளிகளுக்குமேல் உயர்ந்த நிஃப்டி💲!

ABOUT THE AUTHOR

...view details