கடந்த வாரம் டாடா ஸ்டீல் நிறுவனம்FY20Q2எனப்படும்நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டின் முடிவில் 6 சதவிகிதம் மட்டுமே உயர்வை சந்தித்து இருப்பதாகவும், இந்தியாவில் வர்த்தகச் சூழல் சவாலாக உள்ளது எனவும் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் டி.வி. நரேந்திரன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று வெளியான தகவலின்படி தொழிலில் ஏற்பட்டுவரும் சரிவால் ஐரோப்பிய நாடுகளில் 3000 ஊழியர்களை வேலைநிறுத்தம் செய்ய டாடா ஸ்டீல் நிறுவனம் முடிவெடுத்திருப்பதாகவும் இந்த வேலைநிறுத்தம் எந்தந்த இடங்களில் ஏற்படும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இன்னும் தகவல் அளிக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.