இந்தியாவில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்கிறது. கரோனா பரவலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பொருளாதார ரீதியிலும் இந்தியா பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இதனால் ஏராளமான தொழில் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
முக்கியமாக, கரோனா அச்சம் காரணமாக ஹோட்டல்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்யவும் மக்கள் அச்சமடைகின்றனர். இதனால் சோமேட்டா, ஸ்விகி போன்ற நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.
இந்தச் சூழலில், ஸ்விகி நிறுவனம் சுமார் 350 பேரை வேலையைவிட்டு நீக்குவதாக அறிவித்துள்ளது. இது குறித்து ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனாவுக்கு முன்னர் ஆன்லைன் உணவு டெலிவரி துறை இருந்த சூழலில் தற்போது 50 விழுக்காடு கூட இல்லை.