தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

சாலையோர கடைகளின் உணவுகளும் இனி வீடு தேடி வரும்... ஸ்விகியின் அடுத்த அதிரடி!

டெல்லி:பிரதமரின் சாலையோர வியாபாரிகள் ஆத்ம நிர்பார் நிதி திட்டத்தின் கீழ் விரைவில் 125 நகரங்களில் இருந்து சுமார் 36 ஆயிரம் சாலையோர உணவகங்களை ஸ்விக்கி தளத்தில் (swiggy) இணைக்கவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Swiggy
Swiggy

By

Published : Dec 10, 2020, 3:47 PM IST

இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களில் முக்கிய நிறுவனங்களில் ஒன்று ஸ்விக்கி. இந்நிலையில், பிரதமரின் சாலையோர வியாபாரிகள் ஆத்மநிபார் நிதி திட்டத்தின் கீழ் விரைவில் 125 நகரங்களில் இருந்து சுமார் 36 ஆயிரம் சாலையோர உணவகங்களை ஸ்விக்கி தளத்தில் இணைக்கவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏற்கெனவே, நாங்கள் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி அமைச்சகத்துடன் இணைந்து அகமதாபாத், வாரணாசி, சென்னை, டெல்லி, இந்தூர் ஆகிய நகரங்களில் சோதனை அடிப்படையில் 300 சாலையோர உணவங்களில் இருந்து உணவுகளை டெலிவரி செய்தோம்.

சாலையோர உணவகங்கள் குறித்த எங்கள் வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்வதற்காக என்றே ஸ்விக்கி செயலியில் ஒரு ஆப்சனை உருவாக்கியுள்ளோம்.

எங்கள் நிறுவனத்தில் இணையும் அனைத்து வியாபாரிகளும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் (FSSAI) பதிவு செய்யப்படுவார்கள். மேலும் அவர்களுக்கு சான்றிதழுடன் கூடிய பயிற்சியும் அளிக்கப்படும்.

செயலிகளை கையாள்வது எப்படி போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் அனைத்து வியாபாரிகளுக்கும் தனித்தனியாக வீடியோ கால் மூலம் கற்றுத் தருகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதமரின் ஆத்மநிபார் நிதி திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக சுமார் 125 நகரங்களைச் சேர்ந்த 36 ஆயிரம் வியாபாரிகளுக்கு கடன் அளிக்கப்படவுள்ளது.

இதையும் படிங்க: ஐஆர்சிடிசி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் மத்திய அரசு

ABOUT THE AUTHOR

...view details