சூரத்: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே மாதங்களுக்கு இடையேயான காலக்கட்டத்தில் சூரத்தில் ஜவுளித் துறையில் ரூ.8,000 கோடிக்கும் அதிகமாக வர்த்தகம் நடைபெறும். இந்நிலையில், தற்போது கோவிட் பரவல் அதிகரித்துவருவதால் இந்த வர்த்தகம் மீண்டும் பாதிப்படைய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஏனெனில், சூரத் மாநகராட்சி விதித்த கட்டுப்பாடுகள் சந்தையில் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. பிற மாநிலங்களிலிருந்து ஜவுளி வாங்க சந்தைக்கு வரும் வர்த்தகர்கள் கட்டாய கோவிட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஏழு நாள்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சந்தையில் வர்த்தகர்களின் வருகை கடுமையாக குறைந்துவிட்டது. இது வர்த்தகத்தை மேலும் மோசமாக்கியது. சூரத்தில் தினமும் இரண்டரை கோடி மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு வாரத்திலும் ரூ.250 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும். இது குறித்து ஈடிவி பாரத் உடன் பேசிய ஃபோஸ்டா இயக்குனர் ரங்கநாத் ஷார்தா, கடந்த ஆண்டு லாக் டவுன் (பொது முடக்கம்) காலத்தில் வணிகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும், வணிகம் புத்துயிர் பெற்று இந்தாண்டு ரூ.8,000 கோடி விற்றுமுதல் இருக்கும் என்று வர்த்தகர்கள் நம்பினர்.