Stock Market: அமெரிக்க மைய வங்கியின் அறிவிப்பு எப்படி இருக்குமோ என்கின்ற ஐயம், இம்மாத முன்பேர வர்த்தகத்தை முடிக்க வேண்டிய கடைசி நாள் என்னவாகுமோ என்பன உள்ளிட்ட கேள்விகள், வியாழக்கிழமை பங்குச்சந்தை நிலவரம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
இன்று வெளியான காலாண்டு முடிவுகள் திருப்தியைத்தர, அமெரிக்க முதலீடுகள் இங்குதான் வரும் என்ற நிபுணர்களின் கருத்து ஒருசேர சந்தைகள் சற்றே நிமிரத்தொடங்கின.
இன்று ஏர் இந்தியா நிறுவனம் மத்திய அரசின் வாயிலாக டாடா வசம் ஒப்படைக்கப்படும் அரிய தகவலால் மீண்டும் நிமிரத்தொடங்கியது, பங்குச்சந்தை. இருப்பினும் இந்திய பட்ஜெட் எப்படி இருக்கும் என்கின்ற கலக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 581 புள்ளிகள் குறைந்தும், நிஃப்டி 168 புள்ளிகள் குறைந்தும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.