தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

இந்தியப் பங்குச்சந்தையிலும் ஆதிக்கம் செலுத்தும் கொரோனா! - stock market update on 20th feb

மும்பை: நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று சிறப்பாகச் செயல்பட்ட பங்குச்சந்தை, மீண்டும் இன்றைய வர்த்தக முடிவின்போது சென்செக்ஸ் 152.88 சரிந்து 41170.12 என வர்த்தகமாகியுள்ளது.

Stock Market Update
Stock Market Update

By

Published : Feb 20, 2020, 7:46 PM IST

Updated : Feb 20, 2020, 10:54 PM IST

மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கலுக்குப் பிறகு இந்தியப் பங்குச்சந்தை கடுமையான சரிவை சந்தித்தது. பின்பு, விரைவில் எழுச்சிப் பெற்றாலும், சீனாவில் வேகமாகப் பரவிய கொவிட்-19 (கொரோனா வைரஸ்) நோய்த்தொற்று, அந்நாட்டின் வர்த்தகத்தைக் கடுமையாகத் தாக்கியுள்ளது.

இது சீனா மட்டுமல்லாமல் உலக பங்குச்சந்தைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்திய பங்குச்சந்தை (சென்செக்ஸ், நிஃப்டி) தொடர்ந்து நான்கு நாள்கள் சரிவுக்குப் பிறகு நேற்று சிறப்பாகச் செயல்பட்டது.

இருப்பினும் இன்று தொடங்கிய பங்குச்சந்தையில் தொலைத்தொடர்பு நிறுவன பங்குகள் சிறப்பாகச் செயல்படாததால், வர்த்தகத்தின் முடிவின்போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 152.88 புள்ளிகள் சரிந்து, 41170.12 எனவும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 45.05 புள்ளிகள் சரிந்து 12080.85 எனவும் வர்த்தகமாகியுள்ளது.

பங்குச்சந்தையில்சிறப்பாகச் செயல்பட்ட பங்குகள்

  • இண்டஸ் இண்ட் வங்கி
  • டாடா ஸ்டீல்
  • பாரத ஸ்டேட் வங்கி
  • ஜீ என்டர்டெய்ன்மென்ட்

பங்குச்சந்தையில் சரிவில் முடிந்த பங்குகள்

  • சிப்லா
  • டெக் மஹிந்திரா
  • ரிலையன்ஸ்
  • ஏசியன் பெயிண்ட்ஸ்

மேலும் 65 நிறுவன பங்குகள் 52 வாரம் கண்டிராத கடும் சரிவை இன்று சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மந்தநிலையை மோடி அரசு ஏற்கவில்லை - மன்மோகன் சிங்

Last Updated : Feb 20, 2020, 10:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details