தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பட்டையைக் கிளப்பும் பங்குச் சந்தை

மும்பை: கடந்து இரு நாட்களாக சிறப்பாகச் செயல்பட்டு வரும் பங்குச்சந்தையில், இன்று நிஃப்டி 89 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்தும், சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்தும் வர்த்தகமாகி வருகிறது.

stock market

By

Published : Nov 20, 2019, 11:36 AM IST

இன்று தொடங்கிய பங்குச்சந்தையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 313 புள்ளிகள் உயர்ந்து 40789.22 எனவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 87.4 புள்ளிகள் உயர்ந்து 12026.50 எனவும் வர்த்தகமாகி வருகிறது.

மேலும் தொடர்ந்து இரண்டு நாட்களாகச் சிறப்பாக செயல்படும் பங்குச்சந்தையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி லிமிடெட்(IndusInd Bank Limited) பங்குகள் 50 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்துள்ளது.

சிறப்பாகச் செயல்படும் பங்குகளில் பார்தி ஏர்டெல்(Bharti Airtel), சன் பார்மா(Sun Pharma), வோடஃபோன்(Vodafone), ஜீ என்டர்டெயின்மென்ட் (Zee Entertainment) பங்குகளும், நஷ்டத்தைச் சந்திக்கும் பங்குகளில் பார்தி இன்ஃப்ராடெல் (Bharti Infratel), ஐஷர் மோட்டார்ஸ் (Eicher Motors), கோட்டக் மஹிந்திரா வங்கி லிமிடெட் (Kotak Mahindra Bank Limited), ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் லிமிடெட் (HCL Technologies Limited), விப்ரோ லிமிடெட்(Wibro Limited) போன்ற பங்குகளும் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க: அண்ணன் நிறுவனத்தில் பங்குகள் உயரும் நிலையில், தம்பி நிறுவனத்தில் கடும்சரிவு!

ABOUT THE AUTHOR

...view details