தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

Stock Market: வெள்ளி - அள்ளிக்கொடுத்தது கிள்ளிக்கொண்டது! - today share market value

Stock Market: இன்றைய பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 77 புள்ளிகள் குறைந்தும் நிஃப்டி 8 புள்ளிகள் சரிந்தும் முடிவடைந்தன.

அள்ளிக்கொடுத்தது  கிள்ளிக்கொண்டது
அள்ளிக்கொடுத்தது கிள்ளிக்கொண்டது

By

Published : Jan 28, 2022, 9:28 PM IST

Stock Market: கச்சா எண்ணெய் விலை உயர்வு, வரவிருக்கின்ற பட்ஜெட் எப்படி இருக்குமோ என்னும் அச்சம் காரணமாக, கிடைத்தவரை லாபம் என சிலர் பங்குச்சந்தையை விட்டு வெளியேறத்தொடங்க, மீண்டும் சரிவு ஆரம்பித்தது.

கூடவே, புதியவகை Neo Cov என்கிற வைரஸ் குறித்து சீனாவின் வூஹான் நகர விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுப்பதாகத் தகவல் பரவியது.

உலக பங்குச்சந்தைகளுக்கு ஏற்ப தன்னை நிலை நிறுத்திக்கொள்வது இந்திய முதலீட்டாளர்களுக்கு கைவந்த கலை என்பதால், வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று பங்குகள் உயர உயர சென்றன. சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேலும் நிஃப்டி 250 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்தது.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகளில் 700 மில்லியன் அளவிற்கு முதலீடு செய்வதாக அறிவிப்பு வெளியானது.

அதன் விலை கடகடவென உயர ஆரம்பித்து 754 ரூபாயை எட்டியது. வர்த்தகத்தின் முடிவில் அதன் விலை 716 ரூபாயில் நிலை கொண்டது.

வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 77 புள்ளிகள் குறைந்தும் நிஃப்டி 8 புள்ளிகள் சரிந்தும் முடிந்தன.

இன்றைய வர்த்தகத்தில் என்.டி.பி.சி 4 விழுக்காடும், யுனைட்டெட் பாஸ்பரஸ் 2 விழுக்காடும் சன்பார்மா, இந்துஸ்லேண்ட் வங்கி, ஓ.என்.ஜி.சி ஆகியன தலா ஒரு விழுக்காடு ஏற்றத்துடனும் முடிந்தன.

அடுத்த வாரம் பட்ஜெட், உலகப் பங்குச்சந்தைகள் எப்படி பரிணமிக்கிறது, புதிய வைரஸ் குறித்த விவரம் ஆகியவற்றிற்கு ஏற்ப சந்தையின் போக்கு இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

இதையும் படிங்க:நகர்புற உள்ளாட்சித் தேர்தல்; அனல் பறக்கும் சென்னை, பறக்கும் படை தீவிர சோதனை!

ABOUT THE AUTHOR

...view details