ஒமைக்ரான் அச்சுறுத்தல் ஓரளவு நீங்கியது, அமெரிக்க பங்குச்சந்தைகள் உயர்ந்தது போன்ற காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஹவுதி கிளர்ச்சியாளர்களால் அபுதாபியில் ஏற்பட்ட பிரச்சினை, ரஷ்யா - உக்ரைன் பிரச்சினையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க படைகளை தயாராக வைத்திருப்பதாக அறிவித்தது ஆகியன சந்தையில் ஒரு உறுதித்தன்மையை ஏற்படுத்தாமல் வைத்திருக்கின்றன.
அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிதிநிலை கூட்டத்தொடர் ஆகியவற்றால் முதலீட்டாளர்களிடம் காணப்படும் தயக்கம் ஆகியவற்றை இதன் காரணமாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும், இறக்கத்தை நல்ல வாய்ப்பாக கருதி நல்ல பங்குகளில் சிறிது சிறிதாக மூதலீட்டை தொடரவும் அறிவுறுத்துகிறார்கள்.