தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

'உங்களை மகிழ்விக்க என்னை அனுமதித்ததற்கு நன்றி' - ஷாருக்கான் - 28 வருடங்களை நிறைவுசெய்த ஷாருக்கான்

மும்பை: பாலிவுட் கிங் கான் ஷாருக்கான் திரைத்துறையில் 28 ஆண்டுகள் நிறைவு செய்ததை அடுத்து சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் தனது ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

ஷாருக்கான்
ஷாருக்கான்

By

Published : Jun 28, 2020, 4:47 PM IST

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சித் நிகழ்ச்சியான Circus and Faujiயில் நடித்தார். பின் 1992 ஆம் ஆண்டு வெளியான தீவானா( Deewana) என்னும் படத்தின் மூலம் பாலிவுட்டில் அடி எடுத்து வைத்தார். இந்தப் படத்தில் மறைந்த நடிகர் ரிஷி கபூர், திவ்ய பாரதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படத்தை தொடர்ந்து ஷாருக்கான் தனது விடா முயற்சியால் பாலிவுட்டில் தனக்கென ஒரு இடம் பிடித்தார். அதுமட்டுமல்லாது நாட்டில் மிக முக்கிய நபர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஷாருக்கான் இந்தி திரையுலகில் 28 ஆண்டுகள் நிறைவுசெய்ததால் தனது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், "என் ஆர்வம் எப்போது என் நோக்கமாக மாறியது, பின்னர் எனது தொழிலாக மாறியது என்று தெரியவில்லை. உங்களை மகிழ்விக்க பல ஆண்டுகளாக என்னை அனுமதித்ததற்கு நன்றி. எனது தொழில் வாழ்க்கையைவிட எனது எண்ணங்கள் மூலம் உங்கள் அனைவருடன் இன்னும் பல வருடங்கள் இருப்பேன் என நம்புகிறேன். 28 வருடங்கள் வெறும் ஒரு எண்ணிக்கையே” என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details