தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.77,815 கோடி ஈட்டிய அரசு, அதிக அலைக்கற்றையை வாங்கிய ஜியோ - இந்தியாவில் ஸ்பெக்ட்ரம் ஏலம்

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலத்தில் அதிகபட்ச ஒதுக்கீட்டை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பெற்றுள்ளது.

Spectrum auction
Spectrum auction

By

Published : Mar 3, 2021, 12:41 PM IST

நாட்டில் ஐந்தாண்டுகளுக்குப் பின் தொலைத்தொடர்பு ஸ்பெக்ட்ரம் ஏலம் கடந்த திங்கள் (மார்ச்1) மற்றும் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இரண்டு நாளில் ஏலத்திற்குப் பின் அரசு ஒதுக்கீட்டு விவரத்தை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அதிகபட்சமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.57,122.65 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை வாங்கியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ.18,699 கோடி, வோடாஃபோன் ஐடியா நிறுவனம் ரூ.1,993.40 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரத்தை வாங்கியுள்ளன.

ஒட்டுமொத்தமாக ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்கு ரூ.77,815 கோடி கிடைத்துள்ளது. தற்போது, 800,900,1800,2100 மற்றும் 2300 மெகாஹெரட்ஸ் பேன்ட்களுக்கான ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்குப்பின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொத்த ஸ்பெக்ட்ரம் உரிமம் 55 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 8ஆவது இடம்பிடித்த முகேஷ் அம்பானி

ABOUT THE AUTHOR

...view details