தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

சரக்குப் போக்குவரத்தை அதிகப்படுத்த தென்னக ரயில்வே திட்டம்! - தென்னக ரயில்வே

ரயில்வே வாரியத்தின் அறிவுறுத்தல்களின்படி, தெற்கு ரயில்வே தொழில் துறை, வர்த்தகம் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில், வணிக மேம்பாட்டு பிரிவு (பி.டி.யூ) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக அல்லாத சில்லறைப் பொருட்களின் போக்குவரத்தில் ரயில்வேயின் பங்கை அதிகரிக்க இந்த நடவடிக்கை கைக்கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

தெற்கு ரயில்வே
தெற்கு ரயில்வே

By

Published : Jul 6, 2020, 11:40 AM IST

சரக்கு போக்குவரத்து தவிர, சிறு வர்த்தகங்கள், தொழில் துறையு ஆகியவற்றுடனான உறவை வலுப்படுத்த தென்னக ரயில்வே வணிக மேம்பாட்டு பிரிவு (பி.டி.யூ) ஒன்றை அமைத்துள்ளது.

மொத்தமாக அல்லாத சில்லறைப் பொருட்களின் போக்குவரத்தில் ரயில்வேயின் பங்கை அதிகரிக்க இந்த நடவடிக்கைகள் கைக்கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

ஒரு தலைமை சரக்கு போக்குவரத்து மேலாளர், மூன்று உறுப்பினர்களை இந்த பிடியூ பிரிவு கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அவர்கள் தொழில் துறையினருடன் தொடர்பு கொள்வதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும். மேலும், கூடுதல் சரக்குப் போக்குவரத்தை ஈர்ப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் இந்த குழு ஆராயும்.

சென்னையில் உள்ள பிடியூவைப் போலவே, ஐந்து பிரிவுகளை கட்டமைக்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details