மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் வரவு-செலவு திட்ட அறிக்கையுடன் (பட்ஜெட்) ரயில்வே பட்ஜெட்டையும் கடந்த ஒன்றாம் தேதி சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில், “ரயில் பயணிகளின் வசதிக்காக ஆறாயிரத்து 846 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பெரும் தொகை ரயில் பயணிகள் வசதிகளுக்கான கட்டுமானப் பணிக்காகச் செலவிடப்படுகிறது.
பட்ஜெட்டில் ரயில் பயணிகள் வசதிக்கு ரூ.6,846 கோடி ஒதுக்கீடு - ரயில் பயணிகள் வசதிக்கு ரூ.6,846 கோடி ஒதுக்கீடு
ஹைதராபாத்: ரயிலில் பயணிகள் வசதிகளின் கட்டுமான அமைப்புக்கு, நாட்டின் வரவு-செலவு திட்ட அறிக்கையில் ஆறாயிரத்து 846 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
![பட்ஜெட்டில் ரயில் பயணிகள் வசதிக்கு ரூ.6,846 கோடி ஒதுக்கீடு South Central Railway 2020-21 budget South Central Railway infrastructure passenger Railway facility for passengers budget Hyderabad ரயில் பயணிகள் வசதிக்கு ரூ.6,846 கோடி ஒதுக்கீடு மத்திய பட்ஜெட் 2020, ரயில்வே பட்ஜெட் 2020, தென்னக மத்திய ரயில்வே](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5973973-1039-5973973-1580957641646.jpg)
குறிப்பாக, மாற்றுத்திறனாளி பயணிகளுக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான ரூ.672 கோடிகள் செலவிடப்பட உள்ளது. இந்தத் தகவல் தென்னக மத்திய ரயில்வே செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதில், “புதிய வரிகளுக்கு மூலதனம், வைப்புத்தொகை, கூடுதல் பட்ஜெட் வளங்கள் உள்ளிட்ட மொத்த பட்ஜெட் மானியம் இரண்டாயிரத்து 856 கோடி ரூபாய் என்றும் மூன்றாம் வரிசை மற்றும் பைபாஸ் லைன் பணிகளுக்கு மூவாயிரத்து 836 கோடி ரூபாய் செலவிடப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆந்திர தலைநகர் சர்ச்சை: பிரதமர் மோடி தலையிட சந்திரபாபு நாயுடு விருப்பம்