கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக இந்திய வர்த்தகம் முடங்கியுள்ள நிலையில், பல நிறுவனங்கள் பொதுமக்களுக்கு வழங்கிவந்த சேவையை நிறுத்தியுள்ளன. இதோடு இந்தியப் பங்குச்சந்தையும் கடும் சரிவை சந்தித்துவந்த நிலையில், இந்தியப் பொருளாதாரம் பல சிக்கல்களைச் சந்திக்கும் எனப் பொருளாதார கருத்து கணிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஒரு நாட்டின் வளர்ச்சி, அந்நாட்டில் நடைபெறும் ஏற்றுமதி, இறக்குமதியை குறித்து நிர்ணயிக்கப்படுகிறது. கரோனா வைரஸ் தாக்குதலால் இந்திய வர்த்தகம் மந்தமடைந்துள்ளதால் இது நாட்டின் ஜிடிபி என்றழைக்கப்படும் உள்நாட்டு மொத்தஉற்பத்தியைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.