கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 23ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் இந்திய பொருளாராதம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ. 20 லட்சம் கோடி மதிப்பில் பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை அறிவித்தார்.
தன்னிறைவு பொருளாதாரம் என்று பிரதமர் மோடி அழைத்த இந்த ஊக்குவிப்பு திட்டம் குறித்த தகவல்களின் ஒரு பகுதியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளிவிட்டார்.
வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC), வீட்டுக் கடன் வழக்கும் நிறுவனங்கள்(HFC), சிறு கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் (MFI) ஆகியவற்றின் கடன் பத்திரங்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு மத்திய அரசு 100 விழுக்காடு கடன் உத்தரவாதம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
முன்னதாக ரிசர்வ் வங்கி வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பணப்புழக்கத்தை அதிகரிக்க இலக்கு நீண்ட கால ரெப்போ அறிவிப்புகளை வெளியிட்டது. ஆனால் வாராக்கடன் ஆபத்தைத் தவிர்க்க வங்கிகள் கடன் வழங்குவதைத் தவிர்த்ததால் இது எதிர்பார்த்த பலனை தரவில்லை.
அப்போது கடன் பத்திரங்கள் மூலம் வங்கி சாரா நிதி நிறுவனங்களைக் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் உண்மையில் இந்த நடவடிக்கை அவர்களின் பணப் புழக்கத்தை அதிகரிக்குமா என்ற கேள்வி அனைவரிடமும் உள்ளது.
இன்றைய அறிவிப்புகள் மற்ற அறிவிப்புகளிலிருந்து மாறுபட்டதாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் ஆர். காந்தி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "அரசின் உத்தரவாதத்தால் NBFC, HFC, MFI களில் வங்கிகள் முதலீடு செய்யும். இது அவர்களை ஈர்க்கும்.
கடன் பெற்றவர்கள் கடனை திரும்பச் செலுத்தவில்லை என்றால் வங்கிகள் அரசிடமிருந்து எதிர்பார்ப்பார்கள். இது தவிர, அரசின் உத்தரவாம் காரணமாக, இவற்றின் க்ரெடிட் ரேட்டிங் மேம்படுத்தப்படுகிறது. குறைந்த கடன் மூலதன ஒதுக்கீட்டில் வங்கிகள் இந்த கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். எனவே வங்கிகளின் CRAR விகிதமும் இதன் மூலம் மேம்படும்.
முன்பு வங்கிகள் AAA அல்லது AA மதிப்பிடப்பட்ட பத்திரங்களை மட்டுமே விரும்பின. ஆனால் அரசின் உத்தரவாதம் காரணமாக இப்போது வங்கிகளுக்கு மற்றவற்றின் மீதும் நம்பிக்கை இருக்கும். இதனால் அவர்கள் குறைந்த அல்லது மதிப்பிடப்படாத பத்திரங்களிலும் முதலீடு செய்யலாம். எனவே அரசின் அறிவிப்பு NBFC, MFI, HFIகளின் பணப்புழக்கத்தை இந்த முறை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.
இதையும் படிங்க: யெஸ் வங்கி முறைகேடு: அமலாக்கத் துறை வளையத்தில் வதாவன் சகோதர்கள்