நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் 15 நாள்களில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் இரண்டாவது முக்கியமான பட்ஜெட். ஏனெனில் முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் பொருளாதார அறிஞர்கள், தொழிற்சாலை உற்பத்தியாளர்களுடன் பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த பட்ஜெட் விசேஷமானது என்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு. நாட்டில் கடுமையான பொருளாதார மந்தநிலை நிலவும் சூழலில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி, கடந்தாண்டின் ஜூலை-செப்டம்பர் வரையிலான காலாண்டில் 6.1 சதவிகிதமாகக் சரிந்தது. 2011-12ஆம் ஆண்டிற்குப் பிறகு, உள்நாட்டு மொத்த உற்பத்தியில் மிக மெதுவான வளர்ச்சி இதுவாகும்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட அரசின் அதிகாரப்பூர்வ தரவுகள், இந்தாண்டு (2020-21) வளர்ச்சி வெறும் 7.5 சதவிகிதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது பல தசாப்தங்களில் மிகக் குறைவான வளர்ச்சியாகும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழுவின் எதிர்பார்ப்பு என்னவென்றால், 'வளர்ச்சி மந்தநிலையை எதிர்கொள்ள பட்ஜெட் நிதி ஊக்கத்தை உருவாக்க வேண்டும்' என்பதாகும். இருப்பினும் அரசு பொருளாதார சுணக்கத்திலிருந்து விடுபட முதன்மையாக எழும் பல்வேறு கோரிக்கைகளை எதிர்க்க வேண்டும்.இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு.
அதில் முதலாவது முக்கியக் காரணம் இந்திய அரசிடம் செலவு செய்ய போதிய பணம் இல்லை. ஆகவே உள்நாட்டு மொத்த உற்பத்தி குறையும்போது, வரி வசூலிப்பில் ஈடுபடலாம். வரி விதிப்பின் மூலம் பெறப்படும் வருவாயைக் கொண்டு அரசை செயல்படுத்தலாம்.
இந்தாண்டு (2019-20) வரிவிதிப்பின் மூலம் இரண்டு லட்சம் கோடி ரூபாய் திரட்ட அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. இந்த நிதியாண்டின் (2019-20) முதல் ஏழு மாதங்களில் அரசிற்கு கிடைத்த மொத்த வரி வசூல் என்பது இலக்கைவிட குறைவாக உள்ளது. இதுமட்டுமின்றி 2009-10ஆம் நிதியாண்டைக் காட்டிலும் வருவாய் குறைவு என்று பொதுக்கணக்கு கட்டுப்பாட்டாளர் (சி.ஜி.ஏ.) அலுவலகத் தரவுகள் கூறுகின்றன. இதற்கிடையில் பொருளாதார சீரமைப்பு என்ற பெயரில் பெருநிறுவனங்களுக்கு (கார்ப்பரேட்) வரி வருவாயையும் அரசு தியாகம் செய்துள்ளது.
அடுத்து, பண வரவிற்கான ஆதாயம் வரிவிதிப்பில்லாத வருமானங்கள். இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து ஏற்கனவே பணத்தை அரசு பெற்றுள்ளது. இதுதவிர பி.பி.சி.எல். ( BPCL), ஏர் இந்தியா ஆகிய நிறுவனங்களின் விற்பனையும் இந்தாண்டு நிறைவடைந்துவிடும்.
இருந்தாலும், வரி வருவாய் பற்றாக்குறையை இவை ஈடுசெய்யுமா என்பது தெரியவில்லை. ஏனெனில் 2019-20ஆம் ஆண்டுகளில் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2019ஆம் ஆண்டு நவம்பர் வரையிலான காலகட்டம்வரை நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 16.53 சதவிகிதம் மட்டுமே சாத்தியமானது.
இரண்டாவது, பொது உள்கட்டமைப்புகளுக்கு செலவிடுவதும் பயன்தராது. உள்கட்டமைப்புத் திட்டங்கள் நீண்ட நாள்கள் பிடிக்கும். தற்போது வளர்ச்சிக்கு அவசரமான ஒரு ஊக்கம் தேவை. மூன்றாவது வரியை குறைப்பதன் மூலமாகவும் ஒரு தூண்டுதலை வழங்க முடியும்.