தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

Share Market: சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது! - Share Market Today

வர்த்தகத்தின் இறுதியில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 581 புள்ளிகள் உயர்ந்தும், தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி 150 புள்ளிகள் உயர்ந்தும் இன்றைய (மார்ச் 8) வர்த்தகம் நிறைவானது.

Share Market
Share Market

By

Published : Mar 8, 2022, 8:48 PM IST

ஊரோடு ஒத்து வாழ் என்பார்கள், அதுபோலத்தான் இன்று இந்திய பங்குச்சந்தைகளும் இருக்கின்றன. உலகளவில் ஏதேனும் நல்ல செய்தி வராதா, பங்குச்சந்தைகள் உயராதா என காத்திருந்த வேளையில், நேற்று முன்தினம் வர்த்தகத்தில் அமெரிக்க பங்குச்சந்தைகள் உயர ஆரம்பிக்க, இந்தியப் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபருடன் 50 நிமிடங்கள் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார் என்ற தகவல் பின்னாடியே வர, அதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளில் காணப்பட்டது.

அயல்நாடுகளுக்கான் விமானசேவை மார்ச் 27இல் தொடக்கம்:

அயல்நாடுகளுக்கான விமான சேவை மார்ச் மாதம் 27ஆம் தேதி முதல் தொடங்கும் என்ற அறிவிப்பு, 'ஆப்ரேஷன் கங்கா' மூலம் உக்ரைனில் இருந்து இதுவரை 18 ஆயிரம் பேர் திரும்ப அழைத்துவரப்பட்டதாக வந்த அறிவிப்பு ஆகியவை திருப்தி தருவதாக அமையவே பங்கு புள்ளிகள் குறைய ஆரம்பித்ததாலும், வாய்ப்பைச் சாதகமாகப் பயன்படுத்தி பங்குகளை சிலர் வாங்க ஆரம்பிக்கவே சற்றே உயர்வுடன் பங்குச் சந்தை தொடங்கியது.

வர்த்தகத்தின் இறுதியில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 581 புள்ளிகள் உயர்ந்தும், தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி 150 புள்ளிகள் உயர்ந்தும் வர்த்தகத்தை நிறைவுசெய்தன.

இந்தியன் ஆயில் 4 விழுக்காடும், சன் பார்மா, டாடா கன்ஸ்ட்ரக்‌ஷன், டி.சி.எஸ், சிப்லா ஆகிய பங்குகள் தலா மூன்று விழுக்காடு உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்தன.

இதையும் படிங்க: Share Market: 14 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டிய கச்சா எண்ணெய் விலை

ABOUT THE AUTHOR

...view details