திருச்சி: நல்லாதான போய்கிட்டு இருந்துச்சு... என்னாச்சு என உச் உச் உச் கொட்டினர் உலக பங்குச்சந்தை வர்த்தகர்கள். பின்னர்தான் தகவல் வந்தது அமெரிக்க பங்குச் சந்தைகளில் வரலாறு காணாத வீழ்ச்சி என்ற தகவல். அமெரிக்க பங்குச் சந்தைகள் அதல பாதாளத்திற்கு சென்றன. காரணம் நாற்பது ஆண்டுகளில் இல்லாத பணவீக்கம் என வெளியான தகவல். இதனைத் தொடர்ந்து ஆசிய ஐரோப்பிய சந்தைகளிலும் வீழ்ச்சி ஏற்பட இந்திய சந்தைகளையும் தொற்றிக் கொண்டது.
வாரத்தின் கடைசி நாள் வர்த்தக தினத்தில் சென்செக்ஸ் 773 புள்ளிகள் சரிந்தும் நிஃப்டி 231 புள்ளிகள் சரிந்தும் நிறைவு செய்தன. ஐ.ஓ.சி, ஐ.டி.சி, என்.டி.பி.சி, இந்துசிண்ட் வங்கி, டாடா ஸ்டீல்ஸ் ஆகியன சொற்ப உயர்வு கண்டன.