உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி ஒரு துறையில் இருந்து மறுதுறைக்கு முதலீட்டை மாற்றத் தொடங்கினார்கள் என்கிறார்கள், சந்தை வல்லுநர்கள்.
ஜெஃப்ரிஸ் நிறுவனத்தின் கிரிஸ்டோபர் வுட் நேர்காணலில் தெரிவித்த கருத்து, சந்தைகளை சற்றே நிமிர வைத்தது.
அவர் கூறியதாவது, '2026ஆம் ஆண்டு பிற்பகுதியில் இந்தியப் பங்குச்சந்தைகளில் உலகிலேயே நல்ல ஏற்றம் காணப்படும். அதாவது சென்செக்ஸ் ஒரு லட்சம் என்ற புள்ளியைத்தொடும். மற்ற நாடுகளில் உள்ள பிரச்னைகள் இந்தியாவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
அமெரிக்க மைய வங்கியின் வட்டி உயர்வும், கச்சா எண்ணெய் உயர்வும் மட்டுமே சற்று அச்சத்தை கொடுக்கும் என்றாலும் இந்தியாவைப் பொறுத்தவரையில் கச்சா எண்ணெய் பிரச்னையை எளிதாக சமாளித்து விடும் என்றதோடு மீண்டும் கட்டுமானத்துறை வளர்ச்சி பெறும். அத்தோடு அதனைச்சார்ந்த துறைகளுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது’ என்று கூறியுள்ளார். இதனால், மீண்டும் பங்குகள் உயரத்தொடங்கின.
பங்குச்சந்தை புள்ளி விவரங்கள் இந்தியப் பங்குச்சந்தைகள் வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 187 புள்ளிகள் உயர்ந்தும் நிஃப்டி 53 புள்ளிகள் உயர்ந்தும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
பங்குச்சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட அதானி வில்மர் வர்த்தகத்தின் முடிவில் 38.25 ரூபாய் அதாவது கிட்டத்தட்ட 17 விழுக்காடு உயர்ந்து லாபத்தோடு முடிந்தது.
இதையும் படிங்க:'பிக் பாக்கெட்' வேடமணிந்து காவலர்களிடத்தில் சிக்கி மீண்ட நடிகர் நிஷாந்த் ரூஸோ!