கரோனா பரவல் காரணமாக நாட்டின் வேலைவாய்ப்பு விகிதமும் பொருளாதார நடவடிக்கைகளும் பெரும் முடக்கத்தைக் கண்ட நிலையில், சேவைத் துறை தற்போது முன்னேற்றத்தை காணத் தொடங்கியுள்ளது.
சேவைத் துறை நடவடிக்கை தொடர்பான புள்ளி விவரங்களை தனியார் அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூலை மாதத்தை ஒப்பிடும்போது ஆகஸ்ட் மாதத்தில் சேவைத் துறை சார்ந்த வர்த்தக நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.
ஜூலை மாதத்தில் 34.2ஆக இருந்த வர்த்தக நடவடிக்கைகள் குறித்த குறியீடு, ஆகஸ்ட் மாதம் 41.8ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள மூத்த பொருளாதார நிபுணர் ஸ்ரீயா பட்டேல், ”ஆகஸ்ட் மாதம் சவால்களை எதிர்கொண்டுவந்த சேவைத் துறை, தற்போது முன்னேறி வருகிறது.