நேற்றைய தங்கம் விலையைத் தொடர்ந்து இன்றும் (செப். 17) விலை சரிந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ரூ. 4,365 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ரூ. 34,920 என விற்பனையாகிறது.
24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,729 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 37,832 என விற்பனையாகிறது.
நேற்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 35,320 என விற்பனையானது.