கடந்த நான்கு நாள்களாக தொடர் சரிவில் இருந்த தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 18 ரூபாய் அதிகரித்து ரூ. 4,451 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு 144 அதிகரித்து ரூ. 35,608 என விற்பனையாகிறது.
24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,815 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 38,520 என விற்பனையாகிறது.