கரோனா வைரஸ் அச்சத்தால் நீண்ட நாள்களாகக் கடும் சரிவை சந்தித்துவந்த பங்குச்சந்தையின் அனைத்துப் பங்குகளும் நேற்று ஒரேநாளில்உயர்வைச் சந்தித்தன. அதன்படி இன்று தொடங்கிய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தும், நிஃப்டி 180 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தும் வர்த்தகத்தைத் தொடங்கின.
மேலும் 9.55 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 612.87 புள்ளிகள் உயர்ந்து 29148.65 எனவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 164.05 புள்ளிகள் உயர்ந்து 8481.90 எனவும் வர்த்தகமாகிவருகின்றன.