மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்றைவிட 200 புள்ளிகள் குறைந்து தனது வர்த்தகத்தைத் தொடங்கியது. இருப்பினும் பின் உயர்வை சந்தித்த சென்செக்ஸ் தற்போது 300 புள்ளிகள் அதிகரித்து 31753 புள்ளிகளிலும் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 87 புள்ளிகள் அதிகரித்து 9292 புள்ளிகளிலும் வர்த்தகமாகிவருகின்றன.
ஏற்ற இறக்கம் கண்ட பங்குகள்
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பங்குகள் அதிகபட்சமாக 4 விழுக்காட்டிற்கும் மேல் ஏற்றம் கண்டது. அதைத்தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி, பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. மறுபுறம் ஐடிசி, டைட்டான், ஆசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தின்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 1,059.39 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்.