தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பங்குச் சந்தை நிலவரம்: ஊசலாடிய பங்கு வர்த்தகம் - சென்செக்ஸ்

நேற்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 18.75 புள்ளிகள் உயர்ந்து 36,051.81 புள்ளிகள் என வர்த்தகம் நிறைவுற்றது.

share market
share market

By

Published : Jul 16, 2020, 2:58 AM IST

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருதல், பெங்களூரு, பிகார் மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு ஆகிய நடவடிக்கையால் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டன. இருப்பினும் கூகுள் இந்தியாவில் மேற்கொண்டுள்ள முதலீடுகள் கொஞ்சம் சாதகமான சூழலை உருவாக்கியது. இதன் எதிரொலியாக நேற்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறிதளவு ஏற்றத்துடன் முடிந்துள்ளது.

பங்குகளின் ஏற்ற இறக்கங்கள்

ஹெச்.சி.எல், டிசிஎஸ், ஆக்ஸிஸ் வங்கி, டெக் மகேந்திரா போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ், ஜி என்டர்டெயின்மெண்ட், கெய்ல் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின. கடந்த சில நாள்களாக விலை அதிகரித்த ரிலையன்ஸ்கூட நேற்று விலை சரிந்து வர்த்தகமானது.

எம்மாடியோவ்... பணமழையை கக்கும் ரிலையன்ஸின் ஜியோ பங்குகள்! 13ஆவது ஆளாக வந்த கூகுள்!

பங்குச் சந்தை

நேற்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 18.75 புள்ளிகள் அதிகரித்து 36,051.81 புள்ளிகளில் வர்த்தகமானது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 10.85 புள்ளிகள் உயர்வைக் கண்டு 10,618.20 புள்ளிகளில் நிறைவுற்றது.

ரூபாயின் மதிப்பு

நேற்று ரூ.75.44 காசுகளாக நிலைப்பெற்றிருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 30 காசுகள் உயர்ந்து ரூ.75.14 காசுகளாக இருந்தது.

கச்சா எண்ணெய் விலை

பொருள் வணிகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தற்போதைய நிலவரப்படி 5 புள்ளிகளை இழந்து 3040 ரூபாயாக இருந்தது.

ABOUT THE AUTHOR

...view details