தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

எல்லையில் பதற்றம் - பங்குச் சந்தையில் எதிரொலி - TOp gainers

மும்பை: எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை இந்திய பங்குச் சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sensex
Sensex

By

Published : Jun 16, 2020, 7:05 PM IST

மும்பை பங்குச் சந்தை இன்று (ஜூன் 16) காலை சுமார் 600 புள்ளிகள் உயர்ந்து, தனது வர்த்தகத்தை தொடங்கியது. இந்திய பங்குச் சந்தை ஏற்றத்தில் வர்த்தகமாகி கொண்டிருந்தபோது, எல்லையில் ஏற்பட்ட பதற்ற நிலை குறித்த செய்தி வெளியானது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தையில் பலமாக எதிரொலித்தது.

இன்றைய வர்த்தக நாள் இறுதியில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 376.42 புள்ளிகள் (1.13 விழுக்காடு) அதிகரித்து 33,605.22 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 100.30 புள்ளிகள் (1.02 விழுக்காடு) அதிகரித்து 9,914 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்:

ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் பங்குகள் அதிகபட்சமாக நான்கு விழுக்காட்டிற்கும் மேல் உயர்ந்தது. அதேபோல் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, கோட்டக் வங்கி, இன்போசிஸ், ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் கண்டன.

மறுபுறம் டெக் மஹேந்திரா, ஆக்சிஸ் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் ஐ.டி.சி. உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.

காரணம் என்ன?

சர்வதேச பங்குச் சந்தைகள் இன்று (ஜூன் 16) ஏற்றம் கண்டு வர்த்தகமாகின. அதன் தாக்கத்தால், இந்திய பங்குச் சந்தையும் ஏற்றம் கண்டது. அப்போது எல்லையில் ஏற்பட்ட பதற்ற நிலை குறித்த செய்தி வெளியானது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தையில் பலமாக எதிரொலித்ததாகப் பங்குச் சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச பங்குச் சந்தை:

ஷாங்காய், சியோல், ஹாங்காங், டோக்கியோ ஆகிய பங்குச் சந்தைகள் சுமார் ஐந்து விழுக்காட்டிற்கும் மேல் ஏற்றம் கண்டன. அதேபோல ஐரோப்பிய பங்குச் சந்தைகளும் தற்போது ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது.

இந்திய ரூபாய் மதிப்பு:

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 பைசா குறைந்து 76.20 ரூபாய்க்கு வர்த்தகமாகியது.

கச்சா எண்ணெய் விலை:

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 1.41 விழுக்காடு உயர்ந்து, பேரல் ஒன்று 4028 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமாகி வருகிறது.

இதையும் படிங்க: நடப்பு காலாண்டில் வரி வருவாய் 31 விழுக்காடு வீழ்ச்சி

ABOUT THE AUTHOR

...view details