தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

தனிநபர் வருமான வரி குறைக்கப்பட வேண்டும்- ஆதி கோட்ரேஜ் - தமிழ் வர்த்தக செய்திகள்

டெல்லி: இந்திய பொருளாதார மந்தநிலையை சரிசெய்ய தனிநபர் வருமான வரியை குறைக்க வேண்டும் என கோட்ரேஜ் நிறுவனத்தின் தலைவர் ஆதி கோட்ரேஜ் தெரிவித்துள்ளார்

adi godrej to reduce income tax

By

Published : Oct 4, 2019, 9:19 AM IST

இந்திய பொருளாதாரத்தின் சரிவை சரி செய்ய மத்திய அரசு பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கோட்ரேஜ் நிறுவனத்தின் தலைவர் ஆதி கோட்ரேஜ்(Adi Godrej) தனிநபர் வருமான வரியை குறைத்தால் மட்டுமே நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். வரி உயர்வு ஏற்பட்டதால் கோடீஸ்வர தொழிலதிபர்கள் முதலீடு செய்வதில் தயக்கம் காட்டிவருகின்றனர். நுகர்வோரின் எண்ணிக்கை குறைந்ததால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்தனர்.

மேலும் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலையை சரி செய்ய தனிநபர் வருமான வரி குறைக்கப்பட வேண்டியது அவசியம் என இந்திய பொருளாதார உச்ச மாநாட்டில்(India Economic Summit) அவர் தெரிவித்தார்.

கார்பொரேட் வரி குறைப்பை பற்றி கேள்வி எழுந்த நிலையில், "கார்பொரேட் வரிக்குறைப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று ஆனால் அதை விட முக்கியமாக மத்திய அரசு தனி நபர் வருமான வரியை குறைக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product) கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத சரிவை சந்தித்து வருகிறது இதனை சரி செய்ய மத்திய அரசு இதுபோன்ற வரிக்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வாட்ஸ்அப்பின் அடுத்த அதிரடி - வாயைப் பிளந்த பயனாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details