டெல்லி : பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி அவரது கணவர் ராஜ் குந்த்ரா என்ற ரிபு சுதன் குந்த்ரா ஆகியோர் வியான் இன்டஸ்ட்ரீஸ் (Viaan Industries) என்ற நிறுவனத்தை நடத்திவருகின்றனர்.
இந்த நிறுவனத்தில் வர்த்தக விதி மீறல்கள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து செபி (இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம்) விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த விசாரணையில் நிறுவனத்தில் வர்த்தக விதிமீறல்கள் நடந்திருப்பது உறுதியானது.
இதையடுத்து செபி ஷில்பா ஷெட்டி அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு சொந்தமான நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்துள்ளது.