இந்தியாவின் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி வர்த்தக நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கரோனா லாக்டவுன் காரணமாக பொருளாதார வர்த்தக நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அனைத்து நிறுவனங்களும் தங்கள் இழப்பு குறித்து அறிக்கை சமர்பிக்குமாறு தெரிவித்துள்ளது.
கரோனா லாக்டவுன் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கம், சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதை சீரமைக்க அரசு சார்பில் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செபி தெரிவித்துள்ளது.