தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

சைரஸ் மிஸ்திரியின் பங்கு விவகாரம்: டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்! - டாடா சன்ஸ்

டெல்லி: டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரிக்கு சேர வேண்டிய பங்குகளை வழங்க வேண்டும் என அந்நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

SC issues notice to Tata Sons
SC issues notice to Tata Sons

By

Published : May 31, 2020, 5:04 PM IST

Updated : May 31, 2020, 8:00 PM IST

நாட்டின் மிகப் பெரிய தொழில் குழுமமான டாடா சன்ஸ், மளிகை பொருள் முதல் கம்ப்யூட்டர் வரை பல்வேறு பொருட்களை உற்பத்தி மற்றும் சேவையில் கொடிகட்டி பறந்து வருகிறது. இதன் தலைவராக இருந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, 2012ஆம் ஆண்டு ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில், சபோர்ஜி பலோன்ஜி குழுமத்தைச் சேர்ந்த சைரஸ் மிஸ்திரி கடந்த 2012ஆம் ஆண்டு டாடா சன்ஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சில காரணங்களால் 2016ஆம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட சைரஸ் மிஸ்திரி, தான் மீண்டும் டாடா சன்ஸ் குழும தலைவராக பொறுப்பேற்க மாட்டேன் என்று அறிவித்தார். சைரஸ் மிஸ்திரிக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என நிறுவன குழு ஒன்று, இவருக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதன்பின், இது குறித்து சைரஸ் மிஸ்திரி வெளியிட்ட அறிக்கையில், தீர்ப்பாயத்தில் பல்வேறு ஆவணங்களையும் ஆய்வு செய்து எனக்கு சாதகமாக தீர்ப்பு வந்திருக்கிறது. ஆனாலும், எனக்கு மீண்டும் டாடா சன்ஸ் குழுமத் தலைவராகவோ அல்லது இயக்குநராகவோ பதவிவகிக்க விருப்பம் இல்லை. அதே சமயம், எங்களிடம் உள்ள குறைந்த பங்குகளின் உரிமைகளை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டோம். கம்பெனியின் நலனை கருத்தில் கொண்டு, இந்த முடிவை எடுத்துள்ளேன்" என்றார்.

தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், சமீபத்தில் இந்த வழக்கில் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்தது. அதில், சைரஸ் மிஸ்திரியை டாடா குழுமம் பதவி நீக்கியது செல்லாது. மீண்டும் அவரை தலைவராக நியமிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

ஆனால், வழக்கு தொடர்ந்த சைரஸ் மிஸ்திரியோ தனக்கு இந்த நிறுவனத்தில் மீண்டும் பதவியேற்க விருப்பமில்லை என தெரிவித்துள்ளார். இருந்தபோதும், தனக்கு சேர வேண்டிய பங்குகள் முறையாக கிடைக்க வேண்டும் என்றார். இந்நிலையில், சைரஸ் மிஸ்திரிக்கு சேர வேண்டிய பங்குகளை வழங்க வேண்டும் என டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதையும் படிங்க: ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

Last Updated : May 31, 2020, 8:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details