தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பாரத ஸ்டேட் வங்கியின் வருவாய் நான்கு மடங்கு அதிகரிப்பு - பாரத் ஸ்டேட் வங்கி லாபம்

டெல்லி: இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் வருவாய் கடந்த காலாண்டில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

SBI
SBI

By

Published : Jun 5, 2020, 4:46 PM IST

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது காலண்டு வர்த்தக நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி 2019-20 நிதியாண்டின் ஜனவரி - மார்ச் காலாண்டு காலகட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கி ரூ.838.4 கோடி வருவாயில் லாபம் ஈட்டியுள்ளது.

இது கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் நான்கு மடங்கு அதிகமாகும். இதன் மூலம் வங்கியின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.76,027.51 கோடியாக அதிகரித்துள்ளது. அதேவேளை, வங்கியின் வாராக்கடன் அளவு கடந்த கடந்தாண்டில் 7.53 விழுக்காடாக இருந்த நிலையில், தற்போது 6.15 விழுக்காடக சரிந்துள்ளது.

இந்திய வங்கித்துறை தற்போது கடும் நிதிச்சுமையைச் சந்தித்துவரும் நிலையில் பாரத ஸ்டேட் வங்கி மட்டும் சிறப்பாக செயல்பட்டவருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பங்குச்சந்தையில் அதன் மதிப்பு 2.67 விழுக்காடு அதிகரித்து ரூ.178.70ஆக விற்பனையாகிறது.

இதையும் படிங்க:ஜியோவின் பங்குகளை ரூ.9 ஆயிரம் கோடிக்கு வாங்கிய முபாதலா நிறுவனம்!

ABOUT THE AUTHOR

...view details